கொழும்பு, கம்பஹ மாவட்டங்களில் கொரோனா ஆபத்து அதிகரித்துள்ளது!
Posted on 07.14.2020 by Farook in Top News with 0 Comments
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராகக் கடமையாற்றிய ஒருவருக்கும், அந்த முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் இருவருக்கும் கோவிட் வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹ மாவட்டங்களில் கொரோன ஆபத்து அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த ஆலோசகர் கம்பஹ மாவட்டத்தில் வசிப்பராகும். அவருக்கு அவரது வாகன ஓட்டுநருக்கும் கொரோனா கொரோனா தொற்றியிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரும் அவரது வாகன ஓட்டுநரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளதுடன், விருந்தோம்பல் நிகழ்ச்சிகளிலும், அன்னதான நடவடிக்கைகளிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றிய, ஹோமகம மற்றும் கொடகம் பகுதிகளில் வசிக்கும் இரு இராணுவ அதிகாரிகளுக்கும் வைரஸ் தொற்றியிருப்பதுடன், அவர்கள்ளோடும், அவர்களது குடும்பத்தினரோடும் நெருக்கமாகப் பழகிய 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேற்படி இரு இராணுவ அதிகாரிகளும் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்கள். ஒரு அதிகாரி மருத்துவ நிலையமொன்றிற்கும் சென்றுள்ளதோடு. குறித்த மருத்து நிலையத்தின் மருத்துவரொருவரும், அவரது உதவியாளரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.