Posted on 11.29.2020 by Farook in Local News with 0 Comments
சிறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட நபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். சிறைச்சாலைகளுக்குள் பரவி வரும் கோவிட் 19 தொற்று நோய் காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக நாடு பூராவுமுள்ள சிறைச்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பின் கீழ் சிறு குற்றங்கள் சம்பந்தமாக பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 700 தடுப்புக் காவல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவுள்ளது.
இதே நேரம் இந்நாட்டு சிறைகளில் அதிகமானோர் இருப்பதால் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இதற்கேற்ப, மரண தண்டனை மற்றும் ஆயுல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப் பட்டியலை குறித்த நிறுவனங்களுக்கு சிறைச்சாலைகள் தலைமையகத்தின் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.