Posted on 02.28.2021 by Farook in Uncategorized with 0 Comments
கோவிட் 19 வைரஸினால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்ய உத்தியோக ரீதியில் அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தாலும், அதை தாமதப்படுத்த சுகாதராப் பணிப்பாளர் நாயகம் முயற்சிப்பதானது நாட்டில் அனாவசிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமென மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டுகிறார்.
“சடலங்களை அடக்கம் செய்வதற்கு உகந்த இடத்தை அடையாளம் கண்டு, கோவிட் கமிட்டி இறுதி வழிகாட்டல்களை வௌியிடும் வரை அடக்கம் செய்ய முடியாதென சுகாதாதாரச் சேவைகள்பணிப்பாளர் நாயகம் கூறுகிறார். ஆனால், பிரதமர் அறிவித்த பின்பு, சுகாதார அமைச்சர் வர்த்தமானி வௌியிட்டதன் பின்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திட்டமிட்டு அனாவசிய பிரச்சினைகளை நாட்டில் உருவாக்க முயற்சிக்கிறார்.
அறிவியல் ரீதியான காரணங்களின்றி கடந்த காலங்களில் வலுக்கட்டாயமாக தகனம் செய்வது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்பும் தொடர்ந்தும் தாமதம் செய்வதாயின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” என நேற்று (27) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது எஸ்.எம்.மரிக்கார் மேலும் குறிப்பிட்டார்.