සිංහල
English
Contact
Thursday 17th October 2019    
சோஷலிஸ மாற்றீடுக்காக மு.சோ.க. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்!- குமார் குணரத்தினம் « Lanka Views

சோஷலிஸ மாற்றீடுக்காக மு.சோ.க. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்!- குமார் குணரத்தினம்



தற்போதைய வஞ்சக அரசியலுக்குப் பதிலாக, மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வை கொண்டுவரும் சோஷலிஸ மாற்றீடுக்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், ஒரு தனி நபரைச் சுற்றித் திரளும் போட்டியை விட அரசியல் வேலைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த தயாராவதாகவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

இன்று (27) பத்தரமுல்ல. கட்சி அலுவலகத்தில் முன்னிலை சோஷலிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பின்போதே அதன் அமைப்புச் செயலாளர் குமார் குணரத்தினம் மேற்கண்டவாறு கூறினார். முன்னிலை சோஷலிஸக் கட்சியன் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, பிரதானச் செயலாளர் சேனாதீர குணதிலக, கல்விச் செயலாளர் புபுது ஜயகொட ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த குமார் குணரத்தினம்,

“ஜனாதிபதித் தேர்தலை நோக்காகக் கொண்ட அரசியல் கட்சிகள் தமது வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துள்ளன.. விசேடமாக அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பல்வேறு கருத்துக்களை வௌியிட்டு வருவதை நாம் கண்டோம். ஐக்கிய தேசியக் கட்சியினால் வேட்பாளரை அறிவிக்க முடியாத போதிலும், எதிர் கட்சியிலிருந்து இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ  வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளார்.  இந்நாட்டு மக்கள் அவரை அறியாதவர்களல்ல. விசேடமாக ஏப்ரல் 21ம் திகதி நடந்த தாக்குதல் சம்பவத்தினால் துக்கத்திலும் வேதைனையிலும் மக்கள் துயருறும் சந்தர்ப்த்தில்அந்த வேதனைய தனது அரசியல் தேவைக்காக முதலாவதாக பயன்படுத்தியர் கோட்டாபயதான்.

ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தினால் துயரப்படும் மக்களுக்கு, அந்த துயரத்திலிருந்து மீள முடியாதிருக்கும் மக்களுக்கு அவர் கூறினார், இதற்குப் பின்னர் இப்படியான சம்பவங்கள் நடக்காதிருக்க வேண்டுமென்றால் தன்னைப் போன்ற ஒருவர் தலைமைக்கு வர வேண்டுமென்றும், தான் அதற்குத் தயாராக இருப்பதாகவும்.

எங்களுக்குத் தெரியும் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் கோட்டாபய எப்படி வேலை செய்தார், மாற்றுக் கருத்துடையவர்களை எப்படி கடத்தினார் என்று.  ஊடகவியலாளர்களை, அரசியல் செயற்பாட்டாளர்களை தாக்கியமை, கடத்தல், காணமலாக்கல் மற்றும் கொலை செய்தல் போன்ற அனுபவங்களை மறக்க முடியாத நிலையில் கோட்டாபய, மஹிந்த ராஜபக்‌ஷாக்கள் சொல்லும் ஜனநாயகம், தேசிய பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பது இந்நாட்டு மக்களுக்குத் தெரியும். இந்நாட்டில் தேசாபிமானத்தைப் பற்றி அதிகமாகப் பேசுபவர்கள்  தேசாபிமானிகளா என்பதை மக்கள் தமது அனுபவங்களைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டுமென நாம் நினைக்கிறோம்.

கடந்த 4 1/2 வருடங்களாக இந்நாட்டை ஆண்ட ரணில் – மைத்திரி ஆட்சியும் அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுத்த ஆட்சியைம்  நியாயப்படுத்திய வேட்பாளர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிறாரகள். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யாரென்பதை குறிப்பிடாவிட்டாலும், நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யாத நிலையில் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலிலும், ஆகஸ்டில் நடந்த பொதுத் தேர்தலிலும்  ராஜபக்‌ஷ ஆட்சியின் தவறுகளை உரத்து விமர்சித்தார்கள். மக்களுக்கு ஜனநாயகத்தை, நல்லாட்சியை, சட்டத்தின் ஆதிக்கத்தை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ராஜபக்‌ஷ ஆட்சியின் ஊழல் மோசடிகளை, குற்றச் செயல்களை வௌிச்சத்திற்கு கொண்டுவந்து தண்டனை வழங்குவதாக வாக்குறுதி தந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆனால், நாட்டின் மத்திய வங்கியை பட்டப்பகலில கொள்ளையிட்டார்கள். அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில அமைச்சர்களுக்கும் தொடர்பிருந்தமை பகிரங்க இரகசியமாகும். அவர்கள் ஊழல் மோசடியை ஒழித்தது அப்படித்தான்.  பெரிய பெரிய வேலைகள் செய்ததாக அவர்கள் ஊடகங்களில் சொல்கிறார்கள். கொபெல்ஸ் கோட்பாட்டைப் போன்று ஒரே பொய்யை திரும்பச் திரும்பச் சொன்னால் அதை மக்கள் உண்மையென நம்பிவிடுவாரகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜனநாயகத்தைப் பற்றிய அவரகளது கதையும் அப்படித்தான்.

கடந்த காலங்களில் விர்ல்அடையாள சட்டத்தை கொண்டு வந்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து, ஆர்ப்பாட்டங்களை தாக்கி  அவர்கள் கொண்டுவந்த ஜனநாயகத்தைப் பற்றி புதிதாக கூற வேண்டியதில்லை.

இந்நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து பொய்களை இட்டுக்கட்டிய ஏமாற்று அரசியலுக்குப் பதிலாக உண்மையான மாற்றீடு, பொருளாதாரத்திற்கு உண்மையான தீர்வுடன் முன்வரும்  பயணத்திற்காக நாம் ஜனாதபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கிறோம்.  எமது கட்சியின் வேட்பாளரை செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகஞ் செய்ய  தயாராகி வருகிறோம்.

எமது மாற்றீடானது இந்நாட்டு மக்களின் வாழ்வை இருட்டுக்குள் தள்ளும் குறுகிய பேதங்களுக்குப் பதிலாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களினதும்  உண்மையான ஒற்றுமையை உருவாக்கும், அவர்களது உண்மையான கருத்தோடு அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்பும், உண்மையான மக்கள் விருப்பத்திற்கேற்ப வேலை செய்யும் அரசியல் அதிகாரம். அதனை இடதுசாரிய அரசியலாகக் கொண்டுவந்து, அந்த அரசியல் மாற்றீடின் பிரதிநிதியாக எமது கட்சியின் வேட்பாளரை மக்கள் மத்தியில் நிறுத்த நாம் ஏற்பாடு செய்து வருகிறோம்.

நாம் கொண்டுவரும் எமது வேட்பாளர்  தனிநபர் மாற்றீடல்ல, மக்களின் உரிமைகள், பொருளாதார சமத்துவம், மனித சுதந்திரம், தோழமையை பாதுகாக்கும் சோஷலிஸ வேலைத் திட்டத்தோடு பிணைந்த வேட்பாளர் என்ற வகையில், ஜனாதிபதி த் தேர்தலுக்கு, மக்களோடு அரசியல் கருத்தாடலை கட்டியெழுப்பும் நோக்கத்தில், மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள், உற்பத்தி பொருளாதாரத்தைக் கொண்ட வேலைத்திட்டத்தை மக்களோடு உரையாடி, இந்த சோஷலிஸ வேலைத்திட்டம் என்ன என்பதை விளக்கி ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையை ஆரம்பிக்க நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

 

 

 

 




Related News