Posted on 01.22.2021 by Farook in Foreign News with 0 Comments
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் கொள்கைகளை திருப்பிவிட நடவடிக்கை எடுத்துள்ளார்.
இடம்பெயர்வு, கால நிலை மாற்றம், இன சமத்துவம் மற்றும் கொரோனா பெருந்தொற்று சம்பந்தமான ஒரு பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டார். நேற்று அமெரிக்காவின் கெப்பிட்டலில் சத்தியப் பிரமாணம் செய்த சில மணி நேரங்களின் பின்னர் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லைச் சுவர் கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிட்டார்.
அது மாத்திரமல்ல, சில முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தகர்த்தெறிந்ததோடு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலும், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் சேரும் பிரகடனத்திலும் கையெழுத்திட்டார்.