සිංහල
English
Contact
Thursday 16th July 2020    
டி 20 போட்டியில் 7 விக்கட்டுக்களால் இந்திய அணி வெற்றி « Lanka Views

டி 20 போட்டியில் 7 விக்கட்டுக்களால் இந்திய அணி வெற்றி



இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி, பகலிரவு ஆட்டமாக இந்தோரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. அஸ்ஸாமில் நடைபெற்ற முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி, இலங்கை அணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது. இதன் காரணமாக அதிக ரன்கள் குவிக்க முடியாமல், அடுத்தடுத்து இலங்கை அணியினர் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் பெரேரா அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சாளர் தாக்குர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள் 17,3 ஓவர்களில் 3 விக்கட்களை மாத்திரம் இழந்து தமது வெற்றி இலக்கை அடைந்த வெற்றியீட்டியது.

 




Related News