Posted on 07.25.2020 by Farook in Local News with 0 Comments
நேற்று (24) அதிகாலை அங்கொடை தொற்று நோயியல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கோவிட் 19 நோயாளி 8 மணித்தியாலங்களுக்குப் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அவர் மீண்டும் IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொரோனா நோயாளி தப்பிச் சென்றமையால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து புலானாய்வுப் பிரிவு விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக போலிஸ் ஊடக அறிவிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சோனாரத்ன கூறினார்.
திருகோணமலையைச் சேர்ந்த இந்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.