Posted on 05.24.2022 by Farook in Local News with 0 Comments
முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (24) கொஹுவளை ஸ்ரீ மகா விஹார மாவத்தை இலக்கம் 28 இல் அமைந்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான புபுது ஜயகொட, சஞ்சீவ பண்டார, அதன் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர் திகாம்பரன், பொதுச் செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மக்கள் போராட்டத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பது, மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் கைதுகளை எதிர்ப்பது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.