Posted on 06.01.2022 by Farook in Local News with 0 Comments
துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவிற்கு> தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்> ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்காலத் தடையுத்தரவை அறிவித்த உச்ச நீதிமன்றம்> துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஜனாதிபதியினால் மன்னிக்கப்பட்ட துமிந்த சில்வா இன்று கைது செய்யப்படும் வரை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கடமையாற்றினார்.