Posted on 06.01.2022 by Farook in Local News, Uncategorized with 0 Comments
சமகால அரசியல் நிலவரம் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்திக்கும், முன்னிலை சோஷலிஸக் கட்சிக்குமிடையில் நேற்று (31) பெலவத்த, பன்னிபிட்டிய பாதையில் அமைந்துள்ள தே.ம.ச. அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.
இச்சந்திப்பின் போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த, கல்விச் செயலாளர் புபுது ஜயகொட மற்றும் சந்தன சிறிமல்வத்த ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் சார்ப்பில் தலைமைச் செயலாளர் மருத்துவர் நிகால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, நிறைவேற்று சபை உறுப்பினர் லால்காந்த, சாமிந்த ஜயசூரிய, அனுர கருனாதிலக, மஹிந்த ரத்நாயக ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தற்போது நாட்டில் பரவலாக நடக்கும் மக்கள் போராட்டத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பது, எதிர்ப்பாளர்களை கைது செயதல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக செயற்படுவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற அரசியல் சீர்த்திருத்தங்கள் சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடிதில் அடிப்படை புரிதலை பெற்றனர்.
நாட்டில் தலைதூக்கியுள்ள அரசியல் நிலவரம் மற்றும் அதற்கு அரசியல் ரீதியில் முகம் கொடுப்பது சமபந்தமாக பேச்சுக்கள் நடத்துவதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சி சமீபத்தில் எதிர்க்கட்சியைச் சார்ந்த சில அரசியல் கட்சிகளுக்கு எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதன்படி, பல இடதுசாரிய கட்சிகளுடனும், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் 43வது படையணி ஆகியன பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இதுவரை பதிலளிக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணி முக்கிய பாத்திரத்தை வகிக்கும தேசிய மக்கள் சக்தியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றைய தினம் பேச்சுக்கள் நடைபெற்றன.