Posted on 05.22.2020 by Farook in Foreign News, Uncategorized with 0 Comments
பாகிஸ்தானின் சர்வதேச விமானச் சேவைக்கு சொந்தமா PK 8303 விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த விமானம் 91 விமானப் பயணிகளுடனும் , 8 விமானப் பணியாளர்களுடனும் லாஹோரிலிருந்து கராச்சி விமான நிலையத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த மேற்படி விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு 2 மைல் தூரத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
கராச்சி விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள ஜின்னா கார்டன் என்ற மக்கள் செரிந்து வாழும் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. இதனால் பல கட்டிடங்களும், வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தானின் விசேட அதிரடிப் படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.