பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பமிடப்பட்டன!
Posted on 02.24.2021 by Farook in Local News with 0 Comments
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 5 ஒப்பந்தங்கள் நேற்ற (23) பினனேரம் அலரி மாளிகையில் ஒப்பமிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டனர்.
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு சம்பந்தமான பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை முதலீட்டு சபை மற்றும் பாகிஸ்தான் முதலீட்டுச் சபைக்குமிடையில் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை தொழில் நுட்ப நிறுவனம் (ITI) மற்றும் பாகிஸ்தான் கராச்சி பல்கலைக் கழகத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொழும்பு தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத் கொம் செட்ஸ் (COMSATS) பல்கலைக்கழத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொழும்பு பல்கலைக் கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார பல்கலைக் கழகத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்திக்வுள்ளார். அதன் பின்னர் கொழும்பில் நடைபெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்பு தனது நாட்டுக்கு பயணமாவார்.