Posted on 07.09.2020 by Farook in Local News with 0 Comments
பலாங்கொடை, ராவணா கந்த பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இறந்த மாணவியின் மரண விசாரணை கடந்த 07ம் திகதி மாலை நடைபெற்றது. அதன்போது உடற்கூறு ஆய்வாளரினால் மாணவியின் உடலிலிருந்து சில பகுதிகள் இராசயண பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை, சின்னவல, கைவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்தரம் கற்பதற்கு பலாங்கொடை பிரபல பாடசாலையொன்றிற்கு செல்வதற்காக புதிய சீருடை தைப்பதற்காக பலாங்கொடை நகருக்குச் சென்ற அவர் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் பெற்றோரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படதன் பின்னர், மறுநாள் மாணவி இருக்கும் இடம் குறித்து பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தாம் அங்கு சென்று பார்த்தபோது மகளை கட்டிலில் சாய்ந்திருந்ததாகவும், அங்கிருந்த சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துவிட்டு மகளை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பெற்றோர் கூறினர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர் வரும் 22ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.