Posted on 05.25.2022 by Farook in Local News with 0 Comments
நிதியமைச்சர் பதவி தொடர்பான பிரச்சினையை தீர்த்து பிரதமர் ரணிலை நிதியமைச்சராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்த போதிலும், நிதியமைச்சர் பதவியை தன்னிடமே வைத்துக் கொள்ளும் முயற்சி சம்பந்தமாக அரசியல் துறையில் அவதானிக்கப்பட்டது
எவ்வாறாயினும், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், நிதியமைச்சர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட்டுள்ளது.