සිංහල
English
Contact
Saturday 4th April 2020    
மலையகத்தில் மண்டிக் கிடக்கின்றன கலைகள்! « Lanka Views

மலையகத்தில் மண்டிக் கிடக்கின்றன கலைகள்!



மலையகத்தில் மூடிக் கிடந்த கலைகளை தேடிப்பிடித்து மேடையேற்றும் கலைவிழா அக்டோபர்  07ம் திகதி ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் நாள் பூராவும் நடைபெறவிருக்கின்றது

சம உரிமை இயக்கமும், தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கலைவிழாவில் மலையகத்தில் மறைந்து கிடக்கும் கலை அம்சங்கள் மேடையேற்றப்படவிருக்கின்றன.

பல்லின சமூகத்தின் உழைக்கும் மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் கலாச்சார பன்முகங்களை பரஸ்பர புரிந்துணர்வுடன் முன்னேற்றுவதும், இனவாதத்திற்கு எதிராக வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவதுமே இந்த கலை விழாவின் முழு முதல் நோக்கமாகுமென சம உரிமை இயக்கத்தின் முக்கியஸ்தரொருவர் லங்காவீவ்ஸிடம் தெரிவித்தார்.

இனபேதம், மதபேதம், குலபேதம் அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிட்டு சகல மக்களையும் இந்த கலைவிழால் கலந்துகொள்ள வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

 

 

 

 




Related News