Posted on 07.11.2020 by Farook in Local News with 0 Comments
மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றிய பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந் அப்பிரதேசத்தில் 10 வீடுகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளதுடன், 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பெண் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராகப் பணியாற்றியவராவார்.
அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவரோடு நெக்கமாகப் பழகிய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கந்தகாடு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட 56 பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ள நிலையில், இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை வீசக்கூடிய ஆபத்து காணப்படுவதாக சுகாதாரத் துறை சந்தேகிக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை குறித்து ஆம் அல்லது இல்லையென இப்போதே கூற முடியாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாாசிங்க குறிப்பிடுகிறார். என்றாலும் வைரஸ் மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாரவில் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கந்தகாடு மையத்திலிருந்து தமது வீட்டிற்கு செல்ல மூன்று பொது போக்குவரத்து பஸ்களில் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.