Posted on 07.15.2020 by Farook in Local News with 0 Comments
கொரோனா தொற்றிய ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டதன் பின்பு ராஜாங்கன பிரதே யாய 1,3. மற்றும் 5 ஆகிய வலயங்களில் வசிக்கும் 12,000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.
இத்தகைதொரு நிலைமை வேறு பிரதேசத்தில் ஏற்படும் பட்சத்தில் இதே போன்று நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாயின், முழு இலங்கையையும் பாதிக்கக் கூடுமெனவும், தற்போது சில பிரதேசங்களுக்கு மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டியதில்லையெனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கந்தகாடு புனர்வாழ்வு நி்லையத்தில் கொரோனா தொற்றிய 532 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையே, கொரோனா தொற்றிய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ள. அனுராதபுரம் ராஜாங்கனய பிரதேசத்தில் நேற்று (14) சுமார் 320 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.