Posted on 01.12.2021 by Farook in Local News with 0 Comments
ஒகஸ்ட் 05ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ‘அபே ஜன பல கட்சி’க்குக் கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்ட அதுரலியே ரதன தேரர் அரசாங்கத்துடன் சேரத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பான ஆவனங்கள் பாராளுமன்றச் செயலாளரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக த லீடர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
‘அபே ஜன பல கட்சி’க்குக் கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி சம்பந்தமாக அதுரலியே ரதன தேரருக்கும், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்குமிடையில் பல மாதங்களாக நடைபெற்ற மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், இந்நாட்டின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் உரிமையாளரும், சிரேஷ் பொலிஸ் அதிகாரியொருவரும் உதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ள ரதன தேரர் அரசாங்கக் கட்சியுடன் சேருவதற்கு தீர்மானித்துள்ளமை சம்பந்தமாக அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் விரும்பவில்லையெனவும் செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.