Posted on 06.16.2021 by Farook in Sports News with 0 Comments
2020 உதைப்பந்தாட்டப் போட்டி சம்பந்தமான ஊடகச் சந்திப்பின்போது பிரபல உதைப்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு போத்தல்களை அகற்றியமையினால் அமெரிக்க கொகாகோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டொல் நட்டமேற்பட்டுள்ளது.
போரத்துக்கல உதைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் தமக்கு முன்பாக இரண்டு கொகாகோலா குளிர்பான போத்தல்கள் இருப்பதைக் கண்டு அவற்றை புகைப்படக் கருவிக்கு மறைவாக வைத்துவிட்டு அதற்குப் பதிலாக மேசை மீதிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து போர்த்துக்கீய மொழியில்”தண்ணீர்” எனக் கூறியுள்ளார்.
ரொனால்டோவின் இந்த தனிச் ‘சொல்’ வெளிப்பட்டதன் பின்னர் கொகோகோலவின் பங்குகள் 1.6 வீதத்தினால் அதாவது ஒரு பங்கின் பெறுமதி 55.22 டொலர் வரை சரிந்துள்ளது. இதன் காரணமாக கொகோகோலா அமைப்பின் வர்த்தக மதிப்பு 242 பில்லியன் டொலரிலிருந்து 238 பில்லியன் வரை 4 பில்லியன் டொலர் சரிந்துள்ளது.
யூரோ 2020 போட்டித் தொடரின் உத்தியோக அனுசரணையாளரான கொகாகோலா நிறுவனத்தின் செய்தியாளர் இது சம்பந்தமாக கருத்து கூறுகையில், ‘ஒவ்வொருவருக்கும் அவர்களது விருப்பமும் பல்வேறு சுவைகளும் உள்ளன” என்றார்.