Posted on 04.29.2022 by Farook in Local News with 0 Comments
றம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் நேற்று (28) கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் உத்தியோகத்தினர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 19ம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது 15 வயதுடைய பாடசாலை மாணவரொருவரும் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.