Posted on 06.22.2022 by Farook in Local News with 0 Comments
வரி மோசடி குற்றச்சாட்டினால் அபகீர்த்திக்கு உள்ளான கசினே வியாபாரி தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக இன்று (22) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
தனது வியாபார நடவடிக்கைகள் மூலம் ஈட்டிய பெரும் தொகைக்கு வருமானவரி செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட தம்மிக பெரேரா, கடந்த கொரோனா காலத்தில் வீட்டு சுகாதாரப் பொருட்களின் விலையை அதிகரித்து முறைகேடாக இலாபம் ஈட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவராவார்.
இவர், பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் திணைக்களத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பொதுஜன முன்னணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் அவரால் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணம் சில நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.