Posted on 09.17.2019 by Farook in Local News with 0 Comments
ஆசிரியர் – அதிபர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தருமாரு கோரி ஒன்றிணைந்த ஆசிரியர சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமும் நடைபயணமும் இன்று (17) வலஸ்முல்ல நகரில் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
Bc பெரேராஆணையத்தினால் செய்யப்பட்ட அநீதியை சரிசெய் ஆசிரியர்- அதிபர் சம்பளத்தை உயர்த்து! கடதாசி நிரப்பலை நிறுத்து!
கல்விக்கு 6 % ஒதுக்கு!
வெட்டப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கு!
ஆகிய கோசங்களின் கீழ் செப்டம்பர் 26 – 27 ஆகிய தினங்களில் ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்வதற்கு தயாராகி வருவதாகத் தெரிய வருகிறது.