Posted on 01.11.2021 by Farook in Uncategorized with 0 Comments
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளார். 82 வயதான அவர் பாராளுமன்றத்திலேயே வயது கூடிய அமைச்சராவார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீமுக்கும் கொரோனா தொற்றியிருந்தமை நேற்று தெரிய வந்தது.
ஜனவரி 8ம் திகதி பத்திக் மற்றும் கைத்தறி தேசிய ஆடைகள் உற்பத்தி ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் மற்று பிரதமரின் அரசியல் நடவடிக்கைகள் ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவின் நெருங்கிய நண்பர்களாகக் கருதப்படும் 21 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
.