Posted on 02.24.2021 by Farook in Local News with 0 Comments
கோவிட் தடுப்பூசி வழங்குவதில் 60 வயதிற் மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னுரிமையளிக்கும் தேசிய நோயெதிர்ப்புச் சக்தி கொள்கையை தான்தோன்றித்தனமாக மாற்றியமைத்தமைக்கு எதிராக இன்று (24) சில முதியவர்கள் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் கோவிட் தொழில் நுட்பக் குழுவின் அனுமதியின்றி பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உட்பட அரசியல் இயந்திரத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் முதியோர்கள் மரண ஆபத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
கோவிட் வைரஸ் காரணமாக இறந்தவர்களில் 70% 60 வயதிற்கு மேற்பட்டோராவர். கோவிட் தொற்றுக்கு ஆளான 80 வயதிற்கு மேற்பட்டோரில் 62 % இதுவரை இறந்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகையில்,’60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கும் தேசிய நோயெதிர்ப்புச் சக்தி கொளகையை மாற்றியமையானது,வேலை வாங்குவதற்குத் தேவையான உழைப்புப் படையை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் வேலை செய்ய முடியாத மக்களை கொல்லும் அரசின் மிருகத்தனமான தீர்மானமாகும் ‘ என்றார்.