Posted on 05.22.2020 by Farook in Foreign News with 0 Comments
அமெரிக்க அதிபர் COVID19 – வைரஸை கட்டுப்படுத்தத் தவறியமையால் கோபமடைந்த அமெரிக்க மக்கள் வௌ்ளை மாளிகையின் முன்பாக மரண ஊர்வல வடிவத்தில் தமது எதிர்ப்பை வௌிக்காட்டியுள்ளனர்.
வாசிங்டனில் அமைந்துள்ள வௌ்ளை மாளிகையின் முன்னால் நடைபெற்ற இந்த மரண ஊர்வல் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஜனாதிபதியின் உத்தியோக வாசஸ்தலத்தின் முன்பாக வீதிகள் தோறும் சுற்றிவந்தும், உடல்களை வைக்கும் உறைகளை இடத்திற்கிடம் வைத்தும் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது புதிய வடிவத்தை பெற்றிருந்தது.
” ஒரு ஜனாதிபதி இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்?” “டிரம்ப் தோற்றுவிட்டார்” ” “எங்களது துரதிர்ஷ்டம்” போன்ற கோசங்களை அவர்கள் எழுப்பினர்.
“அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் காணப்படுவது அமெரிக்காவிற்கு பெருமை” என சமீபத்தில் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனையும் தாண்டியுள்ளதுடன், 92,000 க்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.