Posted on 02.17.2021 by Farook in Local News with 0 Comments
வர்த்தக அமைச்சர் பந்துள குணவர்தன எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷத சில்வாவை தனது அமைச்சகத்திற்கு அழைத்து அவரிடமிருந்து ஆலோசனை பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
‘தனது தலைமையில் தம்புள்ளயில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதலாவது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தல் விவசாய சேமிப்புக் களஞ்சியத் தொகுதியை நிர்மாணிப்பது குறித்து கருத்து தெரிவிக்க தமக்கு வாய்ப்பளித்துள்ளதாக’ ஹர்ஷத சில்வா தனது பேஸ்க் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாநில மாகாண அமைச்சு, உணவு ஆணையாளர் மற்றும் விவசாய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.
பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைளுககு; கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஹர்ஷத சில்வா நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார சீர்த்திருத்தங்கள் சம்பந்தமான அமைச்சரவை அல்லாத அமைச்சராக இருந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு நேரடி பங்களிப்பவராகவும் செயற்பட்டவர் என்பதால் அவரிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது அந்தக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகும்.
அதன்படி, இரு அரசாங்கங்களினதும் கொள்கை ஒன்றுதான் என்பது வெளிப்படை.
…………………………………