Posted on 06.09.2020 by Farook in Foreign News with 0 Comments
அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஜோர்ஜ ப்ளைட்டின் இறுதிச் சடங்கு இன்று (9) ஹுஸ்டனில் நடைபெறவிருக்கிறது.
மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ப்ளைட் கைது செய்யப்பட்டபோது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அவரை படுகொலை செய்தமையை முன்வைத்து அமெரிக்கா முழுவதும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதோடு, உலகம் பூராவுமுள்ள ஜனநாயத்தை மதிக்கும் மக்களின் ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது.
இதற்கிடையே ப்ளைட்டின் படுகொலை சம்பவத்தின் பிராதா சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி டெரிக் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு இரண்டாம் நிலை மனிதப் படுகொலை உட்பட கடுமையான மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஹுஸ்டனில் நடைபெறவிருக்கும் ஜோர்ஜ ப்ளைட்டின் இறுதிச் சடங்கில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ளக் கூடுமென்பதால், சிலவேளை வன்செயல்கள நடக்கும் பட்சத்தில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.