Posted on 06.02.2022 by Farook in Local News with 0 Comments
21வது அரசியலமைப்பை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதை தடுக்க பஸில் தலைமையிலான குழு புதிய உத்தியை கையாள்வதாக அரசியல் உள்விவகாரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கடடமாக கடந்த திங்கட்கிழமை மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா, சரத் வீரசேகர மற்றும் சிந்தக மாயாதுன்ன ஆகியோர் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில், பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பஸில் ராஜபக்ஷ தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்போது மொட்டுக் கட்சியின் சில பா. உறுப்பினர்கள் இந்தக் கருத்திற்கு எதிர்கருத்துகளை முன்வைத்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் மக்கள் கருத்திற்கு அனைவரும் செவிமடுக்க வேண்டுமெனவும், இல்லையென்றால் அனைவரினதும் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகுமெனவும் கூறியுள்ளனர்.