සිංහල
English
Contact
Saturday 4th April 2020    
Covid 19- அரசாங்கம் புள்ளிவிவர விளையாட்டில்! « Lanka Views

Covid 19- அரசாங்கம் புள்ளிவிவர விளையாட்டில்!



Covid 19- வைரஸ் பரவல் காரணமாக தோன்றியுள்ள அவசர நிலையை அரசாங்கம் தேர்தலில் நன்மைபயக்கும் பரப்புரையாக ஆக்கிக் கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டு எழுகிறது.

  கொரோனா தொற்று சம்பந்தமாக ஜனாதபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘நாட்டு மக்களுக்கான உரையை’ இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. கொரோனா தொற்று சம்பந்தமாக சமூகத்தின் பார்வையை இலகுவாகப் பயன்படுத்தி, இந்த தொற்று நோய் ஆபத்தை ஒழிக்க வேண்டுமாயின் தமது ஆட்சியை வலுப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அதிகாரம் வேண்டுமெனக் கூறியதை கவனிக்க வேண்டும். அதேபோன்று  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தன அரசியல்  அனுபவங்களைக் கொண்டு மக்கள் முகம் கொடுக்கும் சவால்களை அறிந்த பக்குவப்பட்ட அரசியல்வாதியாக நடந்து கொள்ளவில்லை  என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தேவையான அளவு விநியோகம் உள்ளதாகவும், யுத்தத்தில் வென்ற தனது தலைமையின் கீழ் கொரோனா வைரஸ் சவாலே அல்லவென்றும் ஊடகங்களின் முன்பாக மஹிந்த ராஜபக்‌ஷ பெருமையாகக் கூறினார். தலைவர்கள் என்னதான் கூறினாலும், மக்களில் ஆகக் குறைந்த வாழ்வாதரங்களை கொண்டவர்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லாத தீர்மானங்களையே எடுக்கிறார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் நடந்து கொண்டதைப் போன்று, கொரோனா நோய் தொற்றை பயன்படுத்தி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சில வியாபாரிகள் தமது பிரதிபிம்பத்தை உயர்த்திக் கொள்ளும் திட்டத்தையே செயற்படுத்துகிறார்கள். பிற்போடப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கு கொரோனா வைரஸை ஆசீர்வாதமாகக் கொள்ளும் அரசியல் செயற்பாடு பொதுவாக காணக் கூடியதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

விசேடமாக Covid 19- வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் நோய் தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிக்க நாடு பூராவும் 30 வைத்திசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்தாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரை தொடர்பில் பிரச்சினை உண்டு. அடையாளம் காணப்படும் நோயாளர்கள் தொடர்பில் பிரதேசத்தில் பெயர் குறிப்பிடப்படும் வைத்தியசாலைகளில் மேலதிக சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் கிடையாது. அவர்களை முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்ப நேரிடுவதோடு, அவ்வாறான நிலைமையில் நோயாளர்களும் அவர்களது உறவினர்களுனம் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கையிலிருந்து இன்று வரை நோயாளர்களை முறையாக அடையாளம் காணும் தொழில் நுட்பம் இல்லாமல் வைத்தியசாலைகளை பெயர் குறிப்பிடும் போக்கு காணப்படுகிறது. வைத்தியசாலை பணியாளர்கள் தியாகத்துடன் செயற்பட்டாலும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பௌதிக வசதிகள் குறைந்த நிலையில் காணப்படுவதுடன், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தனது பிம்பத்தை வளர்த்துக் கொள்ள அரசாங்கம் புள்ளிவிவர விளையாட்டில் இறஙகியுள்ளது. நோயாளர்களை உள்வாங்கிக் கொண்டு கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்புவதாயின் பல வைத்தியசாலைகளை பெயர் குறிப்பதில் அர்த்தமில்லையென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறைந்தபட்சம் வைத்தியசாலை அலுவலர்கள் சம்பந்மான போக்குவரத்து உட்பட ஏனைய வசதிகளுக்காக அரசாங்கம் சரியான முறையொன்றை தயாரிக்காமல், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரியான திட்டமில்லாமல், மக்களை சுய தனிமைப்பலுக்கு உட்படுத்தும்போது, மிகக் குறைந்த வருமானமுள்ள அன்றாடம் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளும் மக்கள் மிகப்பபெரிய கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.  சில நிவாரணங்களை செயற்படுத்த அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ள போதிலும், இவ்வாறான அவசர முடிவுகள் எடுக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் சம்பந்தமான பிரச்சினை ஏனைய மக்களினன் கவனத்திலிருந்த விலகிச் செல்லும் நிலை காணப்படுகிறது.




Related News