Posted on 07.04.2020 by Farook in Top News with 0 Comments
கொழும்பு மாநகர சபையின் ஊழியர் ஒருவர் உட்பட கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டியில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார மருத்து அதிகாரி கலாநிதி ருவன் விஜயமுனி கூறினார்.
இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் 14 நாட்கள் தனிமைப்பட்டதன் பின்னர் கடந்த 26ம் திகதி அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லையென தெரியவந்த போதிலும், அவருக்கு கொரோனா தொற்றியிருப்பதை கடந்த 26ம் கண்டறியப்பட்டதன் பின்னர் அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நோயாளியோடு நெருக்கமாகப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதனால் நோய் பரவும் அச்சுறுத்தல் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.