Posted on 10.26.2020 by Farook in Foreign News with 0 Comments
கோவிட்- 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக செயற்படும் விதத்தில் ஸ்பெயினில் மீண்டும் இன்றிலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்ட கையோடு இன்றிரவு நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
பொது மற்றும் தனியார் இடங்களில் 6 நபர்கள் மாத்திரமே கூட முடியும்.
இந்த ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை அமுலிலிருக்குமென அந்நாட்டுப் பிரதமர் பெத்ரோ சென்செஸ் கூறினார்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் உடனடியாக செயற்படும் விதமாக தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை 6 மாதங்களுக்கு நீடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளவும் பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.
இவ்வருட ஆரம்பத்தில் கோவிட் – 19 அலையில் சிக்கிய்; ஊரடங்குச் சட்டத்தை உலகிலேயே கடுமையாக அமுல்படுத்திய நாடு தான் ஸ்பெயின். ஆனால் ஐரோப்பாவின் அநேகமான நாடுகளைப் போல அந்நாடும் கோவிட் 19 இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளது.
ஸ்பெயினில் இதுவரை 35,000 பேர் இறந்துள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய சுமார் ஒரு லட்சம் பேர் நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.