Posted on 05.13.2020 by Farook in Foreign News with 0 Comments
கோவிட் 19 வைரஸ் பரவல் காணப்பட்டமையால்,சீனாவின் ஜீலின் நகர்ட மூடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலிருந்த வௌியில் வருவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த சீனாவின் வுஹான் நகர் உட்பட பல பகுதிகளை மீண்டும் திறக்க சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் அந்நாட்டில் கொரோனா ஆபத்து மீண்டும் தலைதூக்கி வருகிறது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகிய பலர் கடந்த சில நாட்களாக கண்டறியப்பட்டுள்ளதோடு, நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை தற்போதை நிலவரப்படி 82,929 ஆகும்.
இதற்கிடையே அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, தலைநகர் பீஜிங்கில பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் திறக்கப்படுவதை அடுத்த மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.