அமெரிக்காவுடன் நேபாள ஆட்சியாளர்கள் செய்துள்ள MCC ஒப்பந்தம் சம்பந்தமாக நேபாள மக்கள் தமது எதிர்ப்பைக் வௌிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
2017ல் நேபாள அரசாங்கம் MCC ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டது. இன்று அந்நாட்டு மக்கள் அந்த ஒப்பந்தத்திற்கு எதிரா ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆட்சியாளார்கள் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டாலும் பாராளுமன்றம் அதை அங்கீகரிக்கக் கூடாதென மக்கள் வேண்டுகோள் விடுகும் மக்கள், பாராளுமன்றம் ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் பட்சத்தில் நாட்டின் வளங்களும், இறையான்மையும் கேள்விக்குறியாவிடுமெனக் கூறுகின்றனர்.
நேபாளத்தின் மின் வலுத் துறையை வலுப்படுத்தல், பிராந்திய மின்சக்தி தொடர்புகளை முன்னேற்றுதல், போக்குவரத்து செலவீனங்களை கட்டுப்படுத்தல். தனியார் முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தல் போன்றவற்றிற்காக 500 மில்லியன் டொல் ஒப்பந்தத்தில் நேபாள அரசாங்கம் ஒப்பமிட்டுள்ளது.
ஆசியாவிலேயே MCC ஒப்பந்தத்தில் முதன் முதலாக ஒப்பமிட்ட நாடு நேபாளம். 2017 செப்டம்பர் 14ம் திகதி அப்போதைய நேபாள நிதியமைச்சரும், பிரதான நடவடிக்கை அதிகாரி ஜொனதன் நாஸ் ஆகியோர் இதில் ஒப்பமிட்டனர்.
தற்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலெய்னா பீ டெப்லிடஸ், நேபாளத்திற்கான அப்போதை தூதுவர் என்ற வகையில் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் செயற்பட்டார். இந்த ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டமை தொடர்பில் நேபாள ஆளும் கம்யூனிஸக் கட்சி தலைவர்களுக்கு மத்தியில் பாரிய பிளவொன்று ஏற்பட்டுள்ளது.
மக்கள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் “இரகசிய நிகழ்ச்சி நிரலை” நேபாளத்தின் மீது சுமத்த முயற்சிப்பதாக அந்நாட்டு எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர்.
MCC ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் திட்டம் சம்பந்தமாக பேசுவதற்காக நேபாள கம்யூனிஸக் கட்சியின் கூட்டமொன்று இன்று நடைபெறவிருக்கிறது.